ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் குழிக்குள் விழுந்த பெண் யானை மீட்பு (காணொளி)

இலங்கையின் தெற்கில் அமைந்துள்ள ஹம்பன்தோட்டா நகரில், இளம் பெண் யானை ஒன்று குழிக்குள் விழுந்த பின்னர் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகள் மற்றும் வன உயிரின அதிகாரிகள் யானையை பத்திரமாக வெளியே இழுந்து கொண்டுவந்து மீட்டுள்ளனர்.

தண்ணீரில் பலமணி நேரம் யானை தத்தளித்ததாகவும், யானையை மீட்க 3 மணி நேரம் போராடியதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்ட பின்னர், முப்பது வயது இருக்கலாம் என நம்பப்படும் அந்த யானையை காட்டுக்குள் விரட்டிவிட்டுள்ளனர்.