ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நவ்ரு அகதிகள் தடுப்பு முகாமில் சித்ரவதை

ஆஸ்திரேலியாவில் குடியுரிமையை பெறுவதற்காக தாம் நவ்ரு தடுப்பு முகாமில் சித்ரவதைகளை எதிர்கொள்வதாக சில தஞ்சம் கோரிகள் பொய் கூறுவதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கூறியிருந்தார்.

படகுகளில் வரும் அகதிகள் பப்புவ நியூகினி அல்லது நவ்ரு தீவுகளில் தடுத்து வைக்கப்படுகிறார்கள். நவ்ரு தீவில் இப்படியாக சுமார் ஐநூறு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகங்கள், மன ரீதியிலான கொடுமைப்படுத்தல்கள் ஆகியவற்றுக்கு அகதிகள் உள்ளாக்கப்படுவதாக கூறும் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் கசிந்ததை அடுத்து ஆஸ்திரேலிய பீட்டர் டட்டனின் கருத்து வந்திருந்தது.

இதனை மோசமான கருத்துக்கள் என்று வர்ணித்துள்ள சராஹ் ஹான்சன் ய்ங் பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

கடந்த மூன்று வருடமாக நவ்ரு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரானைச் சேர்ந்த ஷாகாஎஃஹ் என்னும் பெண்ணின் கதை இது.