ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய யானை பலி (காணொளி)

அசாம் மாநிலத்தில், அதன் மந்தையிலிருந்து பிரிந்து, பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு யானை அடித்துச் செல்லப்பட்டது. பிரம்மபுத்திரா நதியின் வேகத்தில் வங்கதேசத்தை அடைந்தது. ஐந்து வார காலப் போராட்டத்தில் 500 கிலோ மீட்டர் பயணித்தது. அதிகாரிகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் அந்த யானை உயிரிழந்துவிட்டது.