ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்

ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டோஜென் ஆகிய ஹார்மன்களுக்கான மாற்றீட்டு சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு முன்னர் நம்பப்பட்டதைவிட அதிகமாகும்.

நாற்பதினாயிரம் பெண்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கான மருந்துகளை எவ்வளவு காலத்துக்கு எடுத்துக்கொள்கிறார்களோ அவ்வளவு காலத்துக்கு ஆபத்து நீடிப்பதாகவும், ஹார்மோன் மாற்று சிகிச்சை முடிந்தவுடன் ஆபத்து வழமையான நிலைமைக்கு திரும்பி விடுவதாகவும் தெரியவந்துள்ளது.