சிரியாவின் டராயா நகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மீட்பு

சிரியாவின் டராயா நகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மீட்பு

சிரியாவின் டராயா நகரில் பல ஆண்டுகளாக முற்றுகைக்குள் இருந்த மக்கள் மீட்கப்படுகின்றனர்.

அரச படைகளுக்கும் இஸ்லாமிய அரசு எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் அந்நகரில் சுமார் 8000 பேர் சிக்கியிருந்தனர்.

இந்நிலையில் மீட்பு மற்றும் உதவி வழங்கும் வாகனங்களும் கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாகச் அங்கு சென்றன.

அங்கு சிக்கியிருந்த மக்கள் புற்களை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டதாக சிரியாவுக்கான ஐ நா தூதர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனிடையே இன்று சிரியா தொடர்பான இரண்டாவது ராஜதந்திர கூட்டம் ஒன்று ஜெனீவாவில் நடைபெறுகிறது. சிரியா தொடர்பான ஒத்துழைப்பு உடன்பாட்டை இறுதி செய்ய அமெரிக்க மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் இதில் பங்குபெறுகிறார்கள்.

இது குறித்த பிபிசியின் கானொளி.