சியர்த் நகரை 'ஐ எஸ்' அமைப்பிடமிருந்து மீட்க தீவிர முயற்சி

சியர்த் நகரை 'ஐ எஸ்' அமைப்பிடமிருந்து மீட்க தீவிர முயற்சி

லிபியாவின் சியர்த் நகரை தீவிரவாதிகளிடமிருந்து முற்றாக மீட்கும் நடவடிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.

இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடமிருந்து அந்த நகரை மீட்கும் நடவடிக்கு முழுவீச்சில் நடைபெறுவதாக அரச படைகள் கூறுகின்றன.

எனினும் அந்தத் தாக்குதல்களை ஐ எஸ் அமைப்பினர் எதிர்த்து போராடி வருகின்றனர்.

மத்தியத்தரைக்கடல் பகுதியின் கடற்கரையில், ஐரோப்பா மீதான தாக்குதலை நடத்த சிர்த் நகர் தமக்கு தளமாக இருக்கும் என ஐ எஸ் நம்பினர்.

ஆனால் இப்போது அந்தத் தீவிரவாதிகள் அங்கிருந்து விரட்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல்களின் போது கடும் உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்றுவந்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

ஐ எஸ் அமைப்பு சியர்த்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், லிபியாவுக்கான அச்சுறுத்தல் தொடருகிறது.

இரண்டு போட்டி அரசுகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆயுதக் குழுக்கள் அங்கே அதிகாரத்துக்காக போராடி வருகின்றன.

இது குறித்த பிபிசியின் கானொளி.