குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்க அதிபர் தேர்தலும் ஒஹையோவின் முக்கியத்துவமும்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த தேசிய அளவிலான கருத்துக்கணிப்பில் ஹிலரி கிளிண்டன் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

ஆனால் போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில், தேசிய அளவில் விளம்பர பிரச்சாரம் ஒன்றை இந்த வாரம் டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுக்கிறார்.

ஒன்பது முக்கிய மாகாணங்களை இலக்குவைத்து இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது.

அதில் ஒன்றான ஒஹையோவில் வெற்றி பெருபவரே அதிபாராவார் எனும் நீண்ட சரித்திரமும் அங்குள்ளது.

ஆனால் அங்கு குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் மையநீரோட்ட பழமைவாதிகள் மற்றும் பெண்களின் வாக்குகளைப் பெறுவதில் அவர் சிரமப்படுகிறார் என அங்கு சென்றுவந்த பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

இது குறித்த பிபிசியின் கானொளி.