ஆப்ரிக்க யானைகள் கொல்லப்படுவது அதிகரிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அழிவுப் பாதையில் ஆப்ரிக்க யானைகள்

கடந்த பத்தாண்டுகளில் ஆப்ரிக்க யானைகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளன.

முதல் முறையாக அந்தக் கண்டம் முழுவதும் வான்வழியாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் ஒன்றரை லட்சம் யானைகள் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பு 18 நாடுகளில் ஐந்து லட்சம் கிலோமீட்டர் பரப்பளவுள்ள பகுதியில் நடத்தப்பட்டது.

முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன.

தற்போது நடைபெறும் வேகத்தில் சட்டவிரோத வேட்டை தொடருமானால் அடுத்த ஒன்பது ஆண்டுகளில் இப்போது இருக்கும் சுமார் நாலரை லட்சம் யானைகளில் பாதியளவே எஞ்சியிருக்கும் என அந்த கணக்கெடுப்பு எதிர்வுகூறியுள்ளது.

ஆப்ரிக்க யானைகளில் நாற்பது சதவீதத்துக்கும் அதிகமானவை போட்ஸ்வானாவில் உள்ளன. அவையும் இப்போது வேட்டைக்காரர்களால் இலக்கு வைக்கப்படுகின்றன.

இது குறித்த பிபிசியின் பிரத்தியேகக் கானொளி.