அமெரிக்க-ரஷ்ய அதிபர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜி 20 மாநாடு: சிரியா தொடர்பில் அமெரிக்கா-ரஷ்யா உடன்பாடு

சிரியாவில் முழுமையான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலான தமது முன்னெடுப்புகளைச் செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புடினும் உடன்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹ்வாங்ஷோ நகரில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் அகதிகள் பிரச்சினை, தீவிரவாதம், வர்த்தகம்,காலநிலை மாற்றம் உட்பட பல விஷயங்களை தலைவர்கள் விவாதிக்கின்றனர்.

இந்த மாநாட்டில் சிரியாவில் ஐந்தாண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் எடுத்துள்ள முடிவும் தலைவர்களிடையே பேசப்படுகிறது. தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அம்மையார் அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இது குறித்த பிபிசியின் கானொளி.

தொடர்புடைய தலைப்புகள்