வைரக்கல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடும் நெருக்கடியில் போட்ஸ்வானாவின் வைரச் சுரங்கங்கள்

  • 6 செப்டம்பர் 2016

போட்ஸ்வானா வைர சுரங்கங்களின் எதிர்காலம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

அவை பழைமையடுந்துவிட்டதாலும் வைரத்தின் இருப்பு குறைந்து வருவதாலும் அவற்றின் உற்பத்தி சென்ற ஆண்டு மந்தமடைந்தது.

விஞ்ஞானிகள் செயற்கை வைரங்களை உற்பத்தி செய்வதும் சுரங்க வைர வர்த்தக்தை சீர்குலைக்கலாம். உலகில் வைரம் உற்பத்தியாகும் மிகப் பெரிய நாடுகளில் பேட்ஸ்வானா இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

வைரத்தை வெட்டியெடுத்து, மெருகூட்டி ஒரு மதிப்பு மிக்க கல்லாக மாற்றும் அனைத்து செயல்களையும் நாட்டுக்குள்ளேயே செய்வதன் மூலம் நாட்டின் பொருளாரமும், மக்களும் பயன்படுவார்கள் என்று போட்ஸ்வானா முயல்கிறது. போட்ஸ்வானாவின் செல்வந்த வைரச் சுரங்கத்திற்கு செல்ல பிபிசிக்கு அனுமதி கிடைத்தது.

இது குறித்த பிபிசியின் கானொளி

தொடர்புடைய தலைப்புகள்