அமெரிக்க அதிபர் ஒபாமா-பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒபாமா குறித்த கருத்துக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வருத்தம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிறப்பு குறித்து இழிவாக புண்படும் வகையில் தெரிவித்த கருத்துக்களுக்காக தான் வருந்துவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே தெரிவித்துள்ளார்.

இதை தன் மீதான தனிப்பட்ட தாக்குதலாக ஒபாமா எடுத்துக்கொண்டார் எனவும் துதர்தே கூறுகிறார்.

பிலிப்பைன்ஸில் நடைபெறும் சட்டவிரோத கொலைகள் குறித்து அமெரிக்க அதிபர் கேள்வி எழுப்பினால், என்ன பதில் கூறுவார் எனக் செய்தியாளர்களால் கேட்கப்பட்டபோதே புண்படும் வகையிலான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.

கடந்த மே மாதம் பிலிப்பைன்ஸ் அதிபராக துதர்தே பதவியேற்ற பிறகு, போதைப் பொருள் தொடர்பாக நடத்தப்பட்ட பல தேடுதல் வேட்டைகளில் ஆயிரக்கணக்கானோர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் லாவோஸ் நாட்டில் நடைபெற்ற கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்குபெற்ற அதிபர் ஒபாமா இதுகுறித்து ஏதும் கருத்து வெளியிடவில்லை.

இது குறித்த பிபிசியின் கானொளி.

தொடர்புடைய தலைப்புகள்