பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடிப் போட்டிகள்
பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடிப் போட்டிகள்
பாரலிம்பிக்ஸ் என்றழைக்கப்படும் மாற்றுத்திறணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று ரியோ டி ஜெனீரோவில் தொடங்கும் நிலையில்,உலக நாடோடிப் போட்டிகள் கிர்கிஸ்தானில் நடைபெறுகின்றன.
குதிரையேறி மல்யுத்தம் செய்பவர்கள், எலும்புத் துண்டுகளை வீசுபவர்கள், கழுகுகளை வேட்டையாடுபவர்கள் போன்றோருக்கு உலக நாடோடிகள் விளையாட்டு போட்டிகள் ஒரு களமாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில் ஐம்பதுக்குக்கும் அதிகமான நாடுகளின் வீரர்கள் கலந்துகொள்கிறார்கள்.
ஆனால் இவை போட்டிகளாக மட்டுமே பார்க்கப்படாமல், நாடோடிகளின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
போட்டிகள் நடைபெறும் பகுதிக்கு சென்றுவந்தார் பிபிசி கிர்கிஸ் மொழிப்பிரிவின் செய்தியாளர். அவர் வழங்கும் பிபிசி கானொளியின் தமிழ் வடிவத்தை இங்கே கேட்கலாம்.