ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக்: வாராந்திர தொழில்நுட்பக் காணொளி

பிபிசியின் இந்தவார தொழில்நுட்பக் கானொளியில்:

சாம்சங் நிறுவனம் தனது முன்னணி ஸ்மார்ட் ஃபோனான காலக்ஸி 7 நோட்டை சந்தையிலிருந்து திரும்பப்பெற முடிவெடுத்துள்ளது. அதிலுள்ள சில பேட்டரிகளை சார்ஜிங் செய்யும்போது தீப்பிடித்தை அடுத்து அதன் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. சில விமான நிறுவனங்கள் பாதுகாப்பு எச்சரிக்கையாக அந்த வகை செல்ஃபோனை விமானத்தில் கொண்டுசெல்ல தடை விதித்துள்ளன.

ரஷ்ய தேவாலயம் ஒன்றில் போக்கிமான் கோ விளையாட்டை ஆடியவாறே தன்னை படம் பிடித்த ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம். வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிடும் ருசியன் சொகோலோவோஸ்கி மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஃபெட்யா மற்றும் கோஷா ஆகிய இரண்டு ரோபோக்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அவை போர்களில் பங்கேற்காது. இராணுவ வீரர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே இந்த ரோபோக்களின் வேலை. ஆனாலும் இவை அதிகம் பேசுகின்றன எனும் விமர்சனங்கள்.

லண்டனில் ஆளில்லா அதிவேகப் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வேவு பார்க்கவும், தாக்குதல்களை நடத்தவும் உதவக் கூடும் என பிரிட்டிஷ் கடற்படை நம்புகிறது.

இவை குறித்த செய்திகளை இங்கு காணலாம்.