ஹிலரிக்கு உடல்நலக் குறைவு, கலிஃபோர்னிய தேர்தல் பிரச்சாரம் ரத்து

ஹிலரிக்கு உடல்நலக் குறைவு, கலிஃபோர்னிய தேர்தல் பிரச்சாரம் ரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனின் மருத்துவர் அவருக்கு நிமோனியா இருப்பதை உறுதி செய்ததை அடுத்து, கலிஃபோர்னியாவுக்கான தனது பயணத்தை ஹில்லரி ரத்து செய்துள்ளார்.

நியூ யார்க்கில் ஞாயிறன்று நடந்த செப்டம்பர் பதினொன்று தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவஞ்சலியில் இருந்து கிளம்பும்போது ஹிலரி தடுமாறினார்.