Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 மே, 2006 - பிரசுர நேரம் 04:30 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்
 
திமுக தலைவர் மு. கருணாநிதி
திமுக தலைவர் மு. கருணாநிதி

திமுக கூட்டணி வெற்றி

தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக ஆசனங்களைப் பெற்ற திமுக அதனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 163 இடங்களைப் பெற்றுள்ளது.

இதில் திமுக 95 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 35 இடங்களையும், பாட்டாளி மக்கள் கட்சி 18 இடங்களையும், மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களையும் பிடித்திருக்கின்றன.

அதிமுக கூட்டணிக்கு கிடைத்த இடங்கள் 69.

அதில் அதிமுக 61 தொகுதிகளிலும்( இவற்றில் இரண்டில் வாக்கு எண்ணிக்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன), மதிமுக 6 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேசிய முற்போக்கு திரவிடர் கழகத்தின் தலைவர், நடிகர் விஜயகாந்த் விருத்தாசலத்திலும், தளி தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளனர்.

சுதந்திர இந்தியாவில் 1952க்கு பிறகு தமிழகத்தில் தற்போதுதான் எந்த தனிக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திகமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிகமுகவின் பலமான இடங்களாக கருதப்பட்ட தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் திமுக கூட்டணி அதிக வெற்றியை பெற்றுள்ளது.


ஏனைய மாநிலங்கள்

மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்கள்.
கேரளாவிலும் இடதுசாரிகளே ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற்றுள்ள போதிலும், அதற்கு அறுதிப் பெரும்பானமை கிடைக்கவில்லை.

அதனால் ஆட்சியமைப்பது குறித்து அது சிறிய கட்சிகளுடன் பேசிவருகிறது.


வெற்றி வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவு

திமுக ஆதரவாளர்கள்
திமுக ஆதரவாளர்கள்
மதுரை கிழக்கு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த நன்மாறன் வெறும் 52 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மதிமுகவின் பூமிநாதன் 36,332 வாக்குகள் பெற்றார், நன்மாறன் 36,384. அவ்வளவுதான். இதே தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பிரபாகரன் 1583 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

இத்தகைய மிகக் குறைந்த வாக்குவித்தியாச வெற்றி ஓரளவு தமிழக வாக்காளர்களின் மனநிலையினை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

பொதுவாக கூட்டணி வலிமையிலேயே திமுக அணி வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதாகக்கூறலாம்.

இதில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவெனில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 35 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சேரன்மாதேவியில் அஇஅதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர் பி.எச்ண்டியனின் மகன் மனோஜ்பாண்டியனை காங்கிரசைச்சேர்ந்த வேல்துரை தோற்கடித்திருக்கிறார்.

அஇஅதிமுகவிற்கு சற்று மனமகிழ்ச்சியைத்தரும் விஷயம் சென்னையில் 7 இடங்களில் அதுவெற்றி பெற்றுள்ளமையாகும்.

அதன் தலைவி ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் வென்றிருக்கிறார்.

அரசு அமைத்து நடத்துவதில் திமுக அதன் கூட்டணிக்கட்சிகளையே நம்பியிருக்கும்.


பாண்டிச்சேரி நிலவரம்

பாண்டிச்சேரி சட்டப்பேரவை
பாண்டிச்சேரி சட்டப்பேரவை
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

அங்கு காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்துள்ளன.

காங்கிரஸ் 10, திமுக 7, பாமக 2, இந்திய கம்யூனிஸ்ட் 1 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ளன.

அதிமுகவும், அதன் கூட்டணியான புதுவை காங்கிரஸும் தலா 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளன. மதிமுக ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மூன்று சுயேச்சைகளும் அங்கு வெற்றிபெற்றுள்ளனர்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள