Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 05 ஜனவரி, 2010 - பிரசுர நேரம் 14:53 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
போர் முடிவுக்கு வந்த ஆண்டு
 
பிரபாகரனின் உடல் என்று அரசு வெளியிட்ட படம்
பிரபாகரனின் உடல் என்று அரசு வெளியிட்ட படம்
இலங்கையைப் பொறுத்தவரை விடைபெற்றுச் சென்ற 2009 ஆம் ஆண்டு அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிந்த ஆண்டாகவே பதிவு செய்யப்படும்.

கடந்த ஆண்டின் முதல் தேதியில் பரந்தனும், அடுத்த சில தினங்களில் கிளிநோச்சியும் இலங்கைப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

விடுதலைப் புலிகள் அடுத்தடுத்து இழப்புக்களை சந்தித்தனர். இந்த மோதல்களில் பாதிக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

மே மாதம் மத்தியில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. விடுதலைப் புலிகளும் இந்த போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்து விட்டதாகவும் தாம் ஆயுதங்களை மெளனிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை தாம் கொன்றுவிட்டதாக இலங்கை அரசு கூறுவதை புலம் பெயர் தமிழர்களில் பலர் இன்னமும் ஏற்க மறுக்கும் நிலையும் உள்ளது.

அதன் பிறகு இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பாக இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்தாலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மெதுவாகவே நடக்கிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள