Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 30 மார்ச், 2010 - பிரசுர நேரம் 16:46 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
ஸ்ரப்ரேனிற்சா இனப்படுகொலை- மன்னிப்பு!!
 
ஸ்ரப்ரேனிச்சா படுகொலைக் குழிகள் -1995
ஸ்ரப்ரேனிச்சா படுகொலைக் குழிகள் -1995
ஸ்ரப்ரேனிற்சாவில் 1995ம் ஆண்டில் ஏழாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் பொஸ்னியாவின் செர்பியப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது குறித்து செர்பிய நாடாளுமன்றம் ஆராயவுள்ளது.

ஜெனோசைட் எனப்படும் இனப்படுகொலை தாக்குதல்களை நிறுத்துமாறு கோரும் இந்தத் தீர்மானம் செர்பியாவின் தேசியவாதக் கட்சிகளை திருப்திப்படுத்தக்கூடியது.

அத்தோடு சர்பியா அதன் அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தக்கூடிய மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம பார்க்கப்படுகிறது.

ஸ்ரப்ரேனிற்சா படுகொலைகள் நிகழ்ந்து ஒரு தசாப்பதத்துக்கும் அதிகமான காலம் கடந்துள்ள போதிலும் சர்பியாவைப் பொறுத்தவரை பொஸ்னிய யுத்தம் இன்றும் பெரும் சர்ச்சைக்குரிய விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

இந்த போர்க்காலத்தின் போது, பல மோசமான கொடூரங்கள் செர்பியாவின் பெயரிலேயே புரியப்பட்டுள்ளதை அவர்களின் நாடு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று அங்குள்ள பலரதும் கருதுகின்றனர்.

ஆனால் மற்றவர்களோ செர்பியா மீது அநியாயமாக அப்பட்டமான அவதூறுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தொடர்ந்தும் நம்புகின்றனர்.

பொஸ்னிய யுத்தத்தின் போது இடம்பெற்ற கொடூரங்களில் ஐக்கிய நாடுகளால் ஜெனோசைட் என்ற இனப்படுகொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஒரே ஒரு சம்பவமும் இதுவே.

இந்தப் படுகொலைகள் பற்றிய விவாதங்கள் உணர்வுகளைத் தூண்டக்கூடியவையாக அமையலாம். ஆனால் கடந்தகால சசப்புணர்வுகளை மறப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் கருதுகின்றது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள