Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜூன், 2010 - பிரசுர நேரம் 11:26 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
போபால் விபத்து: 8 பேருக்கு சிறை
 
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
போபால் விஷவாயு கசிவில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேருக்கு இந்திய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து விஷவாயு கசிந்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

யூனியன் கார்பைட் நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலையிலேயே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கிரிமினல் சட்டங்களின் அடிப்படையில் பொறுப்பேற்க நேர்ந்திருப்பது இதுவே முதல் முறை.

விபத்தால் ஏற்பட்ட பிறப்புக் குறைபாடு
விபத்தால் ஏற்பட்ட பிறப்புக் குறைபாடு
தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மற்ற ஏழு பேருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தங்களுடைய அலட்சியம் காரணமாக மக்கள் உயிரிழக்கக் காரணமாய் இருந்தனர் என்று இந்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மீது இப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

யூனியன் கார்பைட் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கான அப்போதையத் தலைவரான கேஷுப் மஹிந்த்ரா, மேலாண் இயக்குநரான கோகலே, துணைத் தலைவரான கிஷோர் கம்தார் ஆகியோரும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

தற்போது சிறைத்தண்டனை பெற்றிருப்பவர்கள் அனைவருமே இந்தியப் பிரஜைகள் ஆவர்.

இந்த நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்தின் தலைவரான வார்ரென் ஆண்டர்ஸென் என்ற அமெரிக்கர் இந்த வழக்கில் ஒரு குற்றவாளியாக ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தார் என்றாலும், அப்ஸ்காண்டீ அதாவது தப்பியோடியவர் என்று பின்னர் இவரை நீதிமன்றம் அறிவித்திருந்தது.

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் அவர் பெயர் எங்கும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட்டின் தொழிற்சாலையிலிருந்து மீதைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசிந்ததில் மூவாயிரம் பேர் உடனடியாக உயிரிழந்தனர். பின்னர் சுமார் பதினையாயிரம் பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் இன்றளவும் பிறவிக் கோளாறுகளுடன் குழந்தைகள் பிறந்துவருகின்றன. உலகில் மிக அதிக பாதிப்புகளை உண்டாக்கிய தொழிற்சாலை விபத்து இதுவாகும்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள