Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 ஆகஸ்ட், 2010 - பிரசுர நேரம் 18:28 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்கு காப்புரிமை
 
பட்டு நெசவாளி ஒருவர்
காஞ்சிப்பட்டுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் பூகோள குறியீட்டுச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் காப்புரிமை போன்ற ஒரு பாதுகாப்பு அந்தப் புடவைகளுக்கு கிடைக்கிறது.

இனி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் மட்டுமே “காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள்” என்று அழைக்கப்படும் என தமிழக அரசின் கைத்தறி துறையின் காஞ்சிபுரம் மாவட்ட இணை இயக்குநர் பழனிச்சாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் தனித்தன்மையுடைய காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பும் அங்கீகாரமும் கிடைக்கும் எனவும், இது நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் பட்டுப்புடவை
காஞ்சிபுரம் பட்டுப்புடவை
எதிர்வரும் காலத்தில் காஞ்சிபுரம் பட்டுபுடவைகளுக்கு என தனி முத்திரை பதிக்கப்பட்டு அதற்கு கீழே RGI என குறிக்கப்பட்டிருக்கும் எனவும் கூறும் அவர் அதை வைத்துக் கொண்டு நுகர்வோர்கள் காஞ்சிப் பட்டின் நம்பகத்தன்மையை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

தண்டனை

இந்த முத்திரையை உபயோகப்படுத்த பதிவு செய்து கொள்ளாதவர்கள், இனி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் என்கிற பெயரில் விற்பனை செய்தால் ஆறு மாதத்திலிருந்து மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் பழனிச்சாமி சுட்டிக் காட்டுகிறார்.

இந்த முன்னெடுப்பின் மூலம் காஞ்சிப் பட்டுபுடவைகளை தயாரிக்கும் நெசவாளர்களுக்கும், அதை வாங்கும் நுகர்வோர்கள் ஆகிய இருதரப்பினருக்குமே இந்தக் காப்புரிமை மூலம் பயன் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடுகிறார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள