Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 அக்டோபர், 2010 - பிரசுர நேரம் 15:34 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
சுரங்கத்தை தொட்டது துளை
 
ஆனந்தத்தில் உறவினர்கள்
ஆனந்தத்தில் உறவினர்கள்

சிலியில் நிலத்துக்கடியில் சிக்குண்டுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் 33 பேரையும் மீட்கும் முயற்சியின் முக்கிய கட்டமாக, நிலத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள துளை சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியுள்ள நிலவறையை சென்றடைந்துள்ளது.

சான் ஹோசே சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலவறையை சென்றடையும் முயற்சி உள்ளூர் நேரம் சனிக்கிழமை காலை 8 மணியளவில் கைகூடிய போது கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரமும் சிலியை ஆட்கொண்டன.

இனி சுரங்கப்பணியாளர்களை மீட்புக் குழாய் வழியாக மீட்டெடுக்கும் நடவடிக்கை இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கும்.

நிலத்துக்கடியில் சுமார் 700 மீட்டர் ஆழத்தில் உள்ள நிலவறையில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பொருட்டு நிலத்தைக் குடையும் முயற்சிகள் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இருந்து ஆரம்பித்தன.

இவற்றில் பிளான் பி அதாவது இரண்டாவது இடத்தில் நிலத்தைக் குடையும் முயற்சியே தற்போது சுரங்கப் பணியாளர்களை நெருங்கக்கூடிய விதத்தில் 624 மீட்டர் ஆழத்தை சென்றடைந்துள்ளது.

ஆனால், சுரங்கப்பணியாளர்களை குடையப்பட்ட பாதை வழியாக இலகுவாக தூக்கியெடுக்க முடியுமா அல்லது இரும்பிலான குழாயொன்றை அனுப்பி, அதனூடாக அவர்களை மீட்க வேண்டியேற்படுமா என்பதை தற்போது தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இதற்கான சோதனைகளுக்கு பல மணித்தியாலங்கள் ஏன் நாட்கள் கூட எடுக்கலாம்.மீட்புப்பணி ஆரம்பிக்க இன்னும் மூன்று முதல் எட்டு நாட்கள் வரை எடுக்கலாம் என சிலியின் சுரங்கத்துறை அமைச்சர் லோரண்ஸ் கொல்போன் கூறுகிறார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள