Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 ஜனவரி, 2011 - பிரசுர நேரம் 17:18 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மீனவர் கொலை: "ஆதாரம் வேண்டும்"
 
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக புகார்
இலங்கை கடற்படைப் பகுதி
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கான ஆதாரத்தை அந்நாடு வழங்க வேண்டும் என்று இலங்கை கடற்படை கேட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா ஆதாரம் வழங்குமானால், அது பற்றி தாங்கள் பரிசீலிப்போம் என இலங்கை கடற்படையின் 17 ஆவது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளன வைஸ் அட்மிரல் டி.டபில்யூ.ஏ. திஸ்ஸநாயக கூறியுள்ளார்.

படகுகள் எந்த இடத்தில் உள்ளன என்பதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள், செல்லிட தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போன்றவை எளிதாக கிடைக்கக்கூடிய தற்போதைய காலகட்டத்தில் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தடயங்களை இந்தியத் தரப்பினர் வழங்க முன்வர வேண்டும் என்று திஸ்ஸநாயக கூறியுள்ளார்.

சில நாட்கள் முன்பு தமிழகத்தின் ஜகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அது தொடர்பில் இலங்கை தூதுவரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சர் விளக்கம் கோரியிருந்தார்.

அச்சம்பவத்தை விசாரிப்பதாக இலங்கை கடற்படையும் உறுதியளித்திருந்தது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள