Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 ஜனவரி, 2011 - பிரசுர நேரம் 17:38 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
"கருப்புப் பணம்"-உச்சநீதிமன்றம் அதிருப்தி
 
இந்திய உச்சநீதிமன்றம்
இந்திய உச்சநீதிமன்றம்
இந்தியர்கள், வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள கறுப்புப் பணம் தொடர்பாக, முழுமையான தகவல்களை வெளியிட அரசு தயக்கம் காட்டுவதாக இந்திய உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைப்பது, நாட்டைக் கொள்ளையடிப்பதற்கு ஒப்பானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மற்றும் பலர், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்ததகைய கருத்தை வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஒரு வங்கியில் பணம் வைத்துள்ள 26 பேர் கொண்ட பட்டியலை மட்டும் சீலிடப்பட்ட உறையில், மனுவாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

அதற்கு நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்தது. எல்லா நாட்டு வங்ககளிலும் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களையும் தர வேண்டும். ஏன் ஒரு நாட்டு வங்கியோடு நிறுத்திக் கொண்டீர்கள் என நீதிபதிகள், அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருப்பதாகக் கூறிய அரசு வழக்கறிஞர், அதே நேரத்தில் பல்வேறு நாடுகளுடன் உள்ள ஒப்பந்தங்கள் காரணமாக, தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் திவான், அரசு தன்னிடம் உள்ள தகவல்களை மறைக்க முயல்வதாக குற்றம் சாட்டினார்.

அனைத்து வெளிநாட்டு வங்ககளில் பணம் வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.

கறுப்புப் பண விவகாரம், தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியப் பிரசாரக் கருத்துக்களில் ஒன்றாக இருந்தது. அதை அந்தக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள