Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜனவரி, 2011 - பிரசுர நேரம் 13:06 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
அநுராதபுரம் சிறையில் துப்பாக்கிச்சூடு
 
அநுராதபுரம் சிறைச்சாலையில் மோதல்
அநுராதபுரம் சிறைச்சாலையில் மோதல்
இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் காயமடைந்த ஒரு கைதி இறந்ததாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதில் ஒருவரே உயிரிழந்ததாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் டபிள்யூ. எம். டி விஜயகோன் உறுதி செய்துள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாகவும், அதனைவிட 10 கைதிகளும், 8 சிறை அதிகாரிகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர்
தமது வசதிகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிகாரிகள் தாக்கியதாகவும், கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றைவிட அதிகம் என்று கைதிகள் கூறிய போதிலும், அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இது குறித்து தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கைதிகள் தெரிவித்துள்ளளனர்.

இந்தச் சம்பவங்கள் குறித்து தமக்கு சில கைதிகள் முறைப்பாடு செய்ததாக கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இவை குறித்து தான் உரிய அமைச்சர்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறினார்.

ஆயினும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயன்தரவிலை.

பொலிஸ்தரப்பு பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி இது குறித்து பிபிசியிடம் கூறுகையில் சிறைச்சாலையை சுற்றவர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஆயினும் பொலிஸார் சிறைச்சாலையின் உள்ளே செல்லவில்லை என்றும் கூறினார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள