Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஜனவரி, 2011 - பிரசுர நேரம் 15:24 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மஹிந்த மீது அமெரிக்காவில் வழக்கு
 
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மீது அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக கொலைகள் செய்ததாக குற்றம் சுமத்தி நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வக்கீலான புரூஸ் ஃபெய்ன், இலங்கை இராணுவத்தால் ரஜீகர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் கலைசெல்வி லவனின் கணவர் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் சார்பாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள தான் முப்பது மில்லியன் டாலர் நஷ்ட ஈடு தொகை கேட்டுள்ளதாக கூறினார்.

சித்ரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் அமெரிக்க மண்ணுக்கு வெளியே நடந்து இருந்தாலும், சட்டப்படி அவற்றுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்றும் வக்கீல் மேலும் கூறினார்.

மேலும் இலங்கையில் மறைந்து கொண்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நீதியிடம் இருந்து தப்ப முடியாது என்றும் கூறினார்.

ஆனால் இந்த வழக்கு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட முயற்சி என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள