![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இந்திய வெளியுறவுச் செயலருக்கு மகஜர்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கையின் வடக்கே முறிகண்டி பிரதேசத்தில் இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால் அங்குள்ள தமது காணிகள் பறிபோய் விடுமோ என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள். தாமதமின்றி அந்தப் பகுதிகளில் தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இது தொடர்பாக இலங்கைக்கு ஞாயிற்றுகிழமை வருகை தருகின்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அவர்களுக்கு மகஜர் ஒன்றை அந்த மக்கள் அனுப்பி வைத்துள்ளார்கள். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் மகஜர் அனுப்பியுள்ள இந்தப் பகுதி மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் அவர்களையும் சந்தித்து தமது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருக்கின்றார்கள். இந்த மக்களின் கோரிக்கை குறித்து அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையே வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பின்போது பேச்சுக்கள் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் கூறினார். இடம்பெயர்ந்த நிலையில் மனிக்பாம் முகாமிலும் உறவினர் நண்பர்களது வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்த மக்கள் பல்வேறு பற்றாக்குறைகளையும், வசதியீனங்களையும் எதிர்நோக்கி வருவதாக இந்த மக்கள் கூறுகின்றனர். போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் அந்த இடங்களில் மக்களை அரசு மீள்குடியேற்றம் செய்து வருகின்றது. இடம்பெயர்ந்து மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 20 ஆயிரம் பேர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எனினும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள போதிலும்; முறிகண்டி பிரதேசத்தில் அரசாங்கம் தனது தேவைக்காகக் குடியிருப்பு காணிகளை எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் அரசியல் கட்சிகளும் ஆட்சேபித்திருந்தன. அத்துடன் கடந்த முறை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளரின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டு வரப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முறிகண்டி பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும் அந்தப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|