Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 பிப்ரவரி, 2011 - பிரசுர நேரம் 17:17 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்
 
சிபிஐ பிடியில் ராசா
சிபிஐ பிடியில் ராசா

இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் இன்று ஆலோசனை கூறியது.

இது குறித்து புலன் விசாரணைகளை மேற்கொண்டுவரும் மத்திய புலனாய்வு நிறுவனம் , சிபிஐ, இன்று வியாழக்கிழமை, இந்திய உச்சநீதிமன்றத்தில், தற்போதைய விசாரணை நிலை குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டது, இந்த சர்ச்சைக்குரிய ஒதுக்கீடுகளால் அரசுக்கு எவ்வளவு வருவாய் இழப்பு, எந்த நிறுவனங்கள் இதில் பயனடைந்தார்கள், போன்ற விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன என்று, வியாழனன்று நீதிமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்த டில்லிப் பத்திரிகையாளர் ஜே.வெங்கடேசன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

விசாரணைகள் மீண்டும் மார்ச் முதல் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் ராசாவின் சிபிஐ காவல் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள