Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 ஏப்ரல், 2011 - பிரசுர நேரம் 15:31 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
"வடக்கு கிழக்கில் புதிய நீதிமன்றங்கள்"
 
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
இலங்கையில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் நீதி பரிபாலனத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியாவுக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இலகுவில் நீதியை நாட்டுவதற்கான வழிமுறையைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் நீதிமன்றங்களைப் பார்வையிடுவதற்கும், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அறிவதற்குமாக இரண்டு நாள் விஜயமாக அவர் இந்தப் பகுதிகளுக்கு வருகை தந்திருந்தார்.

வெளிநாடுகளின் உதவியோடு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்கான தமிழ் பேசும் சட்டத்தரணிகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

பிரதான நகர நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற தமிழ்பேசும் சட்டத்தரணிகள் இந்தப் பிரதேசங்களில் பணியாற்ற முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

கடந்த 1996 ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முடிக்கப்படாமல் குவிந்துள்ள வழக்குகளை மாகாணங்களில் இயங்கி வருகின்ற சிவில் மேன்முறையீட்டு மன்றங்களின் ஊடாக விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.

தவிர மாவட்ட நீதிமன்றங்களில் பல வருடக்கணக்காகத் தேங்கிக்கிடக்கின்ற வழக்குகளை விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள