Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 29 ஏப்ரல், 2011 - பிரசுர நேரம் 15:43 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இலங்கை கிரிக்கெட்டில் "மேட்ச் ஃபிக்ஸிங்"
 
ஹஷான் திலகரத்ன
ஹஷான் திலகரத்ன
போட்டிக்கு முன்னரே முடிவை நிர்ணயிக்கும் மேட்ச் ஃபிக்ஸிங் முறைகேடுகள் இலங்கை கிரிக்கெட் அணியில் 1992ம் ஆண்டு முதலே நடந்துவருவதாக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹஷான் திலகரட்ண குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தபட்ட அளவில் இந்த சீர்கேடு இலங்கை அணியில் தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்றும் ஹஷான் திலகரட்ண ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கு முன்னர் முடிவை நிர்ணயிக்கும் முறைகேட்டுடன் தொடர்புகொண்ட இலங்கை வீரர்கள் அனைவரையும் தனக்கு தெரியும் என்றும் ஹஷான் திலகரட்ண கூறியுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி இலங்கையின் டெய்லி மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது கருத்துக்களப் பெற பிபிசி பல முறை முயற்சி செய்தபோதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ஹஷான் திலகரட்ண தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை சனிக்கிழை ஒரு சிறப்பு கூட்டம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர், டி.எஸ்.டிசில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

1984 முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் ஹஷான் திலகரட்ண இலங்கை அணிக்காக விளையாடி வந்தார். 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி அர்ஜுன ரணதுங்க தலைமையில் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள