Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 மே, 2011 - பிரசுர நேரம் 16:13 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கனிமொழிக்கு சம்மன்
 
கனிமொழி
கனிமொழி
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் ஒருவருமான கனிமொழிக்கு, அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அவரது முதலீடு, வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கப் பிரிவு கனிமொழிக்கு உத்தரவிட்டுள்ளது.

கனிமொழியுடன், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் ஷரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் நிறுவனர் ஷாகித் உஸ்மான் பால்வாவின் உறவினர் ஆஸிஃப் பால்வா, குசேகான் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறவுத்தின் இயக்குநர் ராஜீவ் அகர்வால் மற்றும் சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீ்ம் மொரானி ஆகியோருக்கும் அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கனிமொழி உள்பட இந்த ஐந்து பேர் மீதும், இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய புலனாய்வுத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் ஐந்து பேரும் வரும் 6-ம்தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதையடுத்து, அடுத்த வாரம் அவர்கள் ஐந்து பேரிடமும் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள