Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 01 ஜூன், 2011 - பிரசுர நேரம் 11:28 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மீண்டும் தலைவரானார் செப் பிளாட்டர்
 
செப் பிளாட்டர் மீண்டும் ஃபிஃபாவின் தலைவராகிறார்
செப் பிளாட்டர் மீண்டும் ஃபிஃபாவின் தலைவராகிறார்
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஃபிஃபா அமைப்பை மீண்டும் நேரான பாதையில் கொண்டு செல்ல தான் உறுதியுடன் இருப்பதாக மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செப் பிளாட்டர் கூறியுள்ளார்.

இந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று, இங்கிலாந்து கால்பந்து சங்கம் கொண்டுவந்தத் தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டின் ஜூரிக் நகரில் நடைபெறும் ஃபிஃபாவின் மாநாட்டிலேயே தோல்வியடைந்த இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம், ஃபிஃபா மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையிலும், செப் பிளாட்டர் அவர்கள் மீண்டும் நான்கு ஆண்டுகளுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஃபிஃபா ஒரு கண்ணியமற்ற சூழலில் இருக்கிறது என்றாலும், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாகவே இருக்கிறது என்று அந்த மாநாட்டில் செஃப் பிளாட்டர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் உலகக் கோப்பை போட்டிகளில் இறுதி ஆட்டங்களை நடத்துவதற்கு எந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்த சீர்திருத்தங்களையும் அவர் அறிவித்தார்.

இதனிடையே 2022 ஆம் உலகக் கோப்பையை நடத்த கத்தார் நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவானது, குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெர்மானிய கால்பந்து சங்கம் கோரியுள்ளளது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள