Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 14:28 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
கிரிக்கெட்: 2000மாவது டெஸ்ட் ஆட்டம்
 
பூவா தலையா போடும் காட்சி
பூவா தலையா போடும் காட்சி
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழனன்று துவங்கியுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் சர்வதேச டெஸ்ட் வரலாற்றின் 2000மாவது ஆட்டம் ஆகும்.

மேலும் இது இந்த இரு நாடுகள் இடையில் நடக்கும் 100ஆவது போட்டியும் ஆகும்.

1877ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையில்தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் என்பது முதன் முதலாக விளையாடப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டின் உச்சபட்ச சவாலாகக் கருதப்படுவது டெஸ்ட் கிரிக்கெட்தான். கிரிக்கெட் விளையாட்டின் தூய்மையான வடிவம் என்றால் அது டெஸ்ட் ஆட்டம்தான் என்றும் பலர் கருதுகின்றனர்.

டெஸ்ட் ஆட்டங்களுக்கு இங்கிலாந்தில் அரங்கம் நிறைகிறது. ஆஸ்திரேலியாவிலும் அரங்கம் வருகின்ற ரசிகர்களின் அளவு பரவாயில்லை என்ற நிலை உள்ளது. ஆனால் பிற நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை நேரில் காணவரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டை அமர்ந்து ரசிப்பதற்கு தேவையான நெடுநேர கவனமும் பொறுமையும் இக்கால இளைஞர்களுக்கு இல்லை என்று ஒரு கண்ணோட்டம் உள்ளது.

தவிர கிரிக்கெட்டின் குறுகிய வடிவங்களான ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் போட்டிகள் போன்றவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

தொலைக்காட்சி நிர்வாகிகளும் இவ்வடிவங்களையே விரும்புகின்றனர். ஐ.பி.எல். பந்தயத்தில் ஒரு அணிக்கு விளையாடினால் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் கிரிக்கெட் ஆட்டக்காரர்களும் இவ்வடிவங்களைப் பெரிதும் விரும்புகின்றனர்.

இதனால் கிரிக்கெட் நிர்வாக சபைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதென்பதில் பெரும் சவால் எழுந்துள்ளது.

ஐந்து நாள் ஆட்டங்கள் மீது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் டெஸ்ட் தொடர் அல்லாது பல்வேறு நாடுகளும் விளையாடும் டெஸ்ட் பந்தயம் ஒன்றைக் கொண்டுவரலாம் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாக சபை யோசனை தெரிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் மங்கிவருவது பற்றி முன்பேகூட பேச்சு அடிபட்டதென்றாலும் 134 ஆண்டுகளை இந்த வடிவம் கடந்துவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நட்சத்திர மட்டைவீச்சாளர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 99 சதங்களை அடித்துள்ளார். இந்த முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது நூறாவது சதத்தை அடிக்க வாய்ப்புள்ளது. அவர் இந்த சாதனையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள