Skip to main contentAccess keys helpA-Z index
BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 08 ஆகஸ்ட், 2011 - பிரசுர நேரம் 16:17 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
லண்டன் வீதிகளில் வன்முறைகள்
 
டோட்டன்ஹாம் வன்முறைகள்
டோட்டன்ஹாம் வன்முறைகள்
லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

'டோட்டன்ஹாம்' பகுதி

மார்க் டக்கன்- பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்
மார்க் டக்கன்- பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்
சனிக்கிழமை இரவு, முதலில் மிக மோசமாக வன்முறை வெடித்த டோட்டன்ஹாம் பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தப்பகுதி வழமைக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அங்குள்ள பிரதேசவாசிகளில் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

கடந்தவாரத்தில், வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு பிரச்சனை ஆரம்பித்தது.

அந்த சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.

லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.

அங்கு வாழ்கின்ற கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.

ஆனால் சாக்குபோக்கு சொல்லி இந்த வன்முறைகளை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட முடியாது என லண்டனில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான துணை மேயர் கிட் மோல்ட் ஹவுஸ் கூறியுள்ளார்.

இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கிறது.

நாட்கள் நகரநகர எல்லோரின் கண்களும் பிரிட்டன் தலைநகரில் குவிகின்றன.

ஒலிம்பிக் விவரணங்கள் லண்டனின் மதிப்பையும் பெருமையையும் மெருகுடன் விளம்பரப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அதனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள