ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆபத்தை தவிர்க்க வருகிறது முப்பரிமாண வரைபடம்

  • 16 செப்டம்பர் 2016

கடந்த 225 ஆண்டுகளாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் வரைபடங்களை ஆர்டினன்ஸ் சர்வே என்கிற அரசுத்துறை வரைந்துவந்தது.

மலையேறுபவர்களுக்கும், மீட்புப்பணியில் ஈடுபடுபவர்களுக்கும் இவையே இதுவரை வழித்துணையாக இருந்து வந்தன.

தற்போது அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைதூர மலைப்பிரதேசங்களை முப்பரிமாண வரைபடங்களாக உருவாக்கும் முயற்சியை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

வரைபடங்களின் தோற்றத்தையும் பயன்பாட்டையும் முழுமையாக புரட்டிப்போடவல்ல இந்த தொழில்நுட்ப வரைபடத்தயாரிப்பு எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.