ஸ்னாப்சாட்டின் காணொளிப் பகிர்வு வசதியுள்ள கறுப்புக் கண்ணாடி
ஸ்னாப்சாட் என்ற தகவல் தொடர்பு செயலி நிறுவனம் தனது முதல் கருவியான, காணொளிப் பகிர்வு வசதியுள்ள கறுப்புக் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பெக்டக்கல்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கண்ணாடி, ஒரு சிறிய கேமராவால் பயன்பாட்டாளர்கள் காட்சிகளைப் படம் பிடிக்க உதவுகிறது.
115 டிகிரி கோண லென்ஸைக் கொண்டுள்ள இந்தக் கருவி, சராசரியான ஸ்மார்ட்போனை விட அகலமான கோணம் கொண்டது. மேலும் இது மனிதப் பார்வையில் பார்ப்பது போன்றது.
மற்ற பயன்பட்டாளர்களுடன் பகிர, படங்களை செயலிக்கு நேரடியாக மாற்ற முடியும்.
இந்த நிறுவனம் தனது பெயரை ஸ்னாப் இங்க் என்று மாற்றுகிறது. ஏனெனில், இது தற்போது ஸ்னாப்சாட் செயலியை விட அதிக செயல்பாடுகளைத் தருகிறு என்று அது கூறியுள்ளது.