உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஒப்பந்தம் வெற்றி

  • 15 அக்டோபர் 2016

சுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption உலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதி

ருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர்.

ஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும்.

கரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை( carbon dioxide)பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை(greenhouse gases) போன்று

ஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாடு, மூன்று ஆண்டுகளில், நிறுத்தப்படும்.

குறைவான வளர்ச்சியை உடைய நாடுகளில், இந்த முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கும்.