செவ்வாயில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செவ்வாயில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்

  • 19 அக்டோபர் 2016

ஐரோப்பிய விண் ஆய்வு மையம் தனது விண்கலனை செவ்வாய் கிரகத்தில் இன்று புதன்கிழமை தரையிறக்கவிருக்கிறது.

இது வெற்றிபெற்றால் செவ்வாய் கிரகத்துக்குள் ஐரோப்பாவின் விண்கலன் ஒன்று தரையிறங்குவது இதுவே முறையாக இருக்கும்.

பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா அனுப்பிய விண்கலன் தனது சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்ப இயலாமல் தோற்றுப்போனது.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கான முயற்சி இது.

இது குறித்த பிபிசியின் செய்திக்குறிப்பு.