போதை பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட அமெரிக்காவின் தலைமை மருத்துவர் அறைகூவல்

போதைப் பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாவதற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி அமெரிக்காவின் பொது தலைமை மருத்துவரான விவேக் மூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் முக்கியமான பொது சுகாதார நெருக்கடி இது என்று அவர் விவரித்துள்ளார்.

இது தொடர்பாக வெளிவந்துள்ள முதல் அறிக்கையில், தவறான போதைப்பொருள் மற்றும் மது பயன்பாடு பல மில்லியன் அமெரிக்கர்களை பாதிப்பதாகவும், ஓவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த விவேக் மூர்த்தி, ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் தான் இது தொடர்பான சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து முழுமையான மறுபரிசீலனை தேவை என்று கூறியுள்ள விவேக் மூர்த்தி, போதைப் பொருள் மற்றும் மது பயன்பாட்டினை குண ரீதியான குறைபாடாக பார்க்கக் கூடாதென்றும், புற்றுநோய் அல்லது நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய் போல கருத வேண்டும்.

தொடர்புடைய தலைப்புகள்