நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் ஆல்ட்ரின் தென் துருவத்திலிருந்து வெளியேற்றம்

நிலவில் இரண்டாவதாக கால்பதித்த பஸ் ஆல்டிரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தென் துருவத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நிலவில் இறங்கிய இரண்டாவது வீரர் ஆல்ட்ரின் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

86, வயதாகும் முன்னாள் விண்வெளி வீரரான இவர் , தனியார் சுற்றுலா குழுவில் ஒருவராக அண்டார்டிகாவிற்கு விஜயம் செய்துள்ளார்; உடல்நிலை சரியில்லாததை அடுத்து , தென் துருவத்திலிருந்து 1300 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள அமெரிக்க ஆய்வு மையத்திற்கு விமானம் மூலம் ஆல்ட்ரின் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுற்றுலா நிறுவனம் அவரின் உடல்நிலை மருத்துவரின் கண்காணிப்பில் ஸ்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

தான் இந்த தென் துருவக் குளிரி்லிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அளவுக்கு உடைகள் இல்லாமல் இருக்கக்கூடும் என்று இந்தப் பயணம் பற்றி ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் ஆல்ட்ரின் ட்விட்டரில் ஜோக் அடித்திருந்தார் .