பார்வையற்றோரின் கண்களாக மாறும் செல்போன் செயலி

கண்பார்வையற்றவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் எப்படியெல்லாம் உதவ முடியும்?

அவர்களின் கண்களாக மாறி அன்றாட வாழ்வில் சுயாதீனமாக வாழ்வதற்கு உதவ முடியும் என்கிறார் அவர்களுக்கான திறன்பேசி செயலியை வடிவமைத்திருக்கும் தொழில்நுட்ப வல்லுனர்.

பல்லாயிரக்கணக்கான பார்வையற்றவர்களுக்கு ஏற்கனவே உதவத்துவங்கியுள்ள இந்த புதிய திறன்பேசிச் செயலி எப்படி செயற்படுகிறது? அது எந்தெந்த வகைகளிலெல்லாம் பார்வையற்றவர்களுக்கு உதவுகிறது என்பதை விளக்கும் பிபிசியின் பிரத்யேகச் செய்தித்தொகுப்பு.