நிலவு சுற்றுலாவுக்கான முன்பதிவு துவங்கியது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலவு சுற்றுலாவுக்கான முன்பதிவு துவங்கியது; பணம் கட்டிய இருவர் யார்?

நிலவுக்கு பயணிக்க நீங்கள் தயாரா?

உங்களை நிலவுக்கு கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் தான் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறது.

தமது ராக்கெட்டில் நிலவுக்கு செல்வதற்கான முன்பதிவும் ஆரம்பித்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்இன் ராக்கெட்டில் நிலவுக்குசெல்ல இருவர் பணம் கட்டியுள்ளனர்.

அவர்கள் அடையாளம் தெரியாது; ஆனால் அவர்கள் ஹாலிவுட் ஆட்களல்ல என்றுமட்டும் தெரியும்.

அவர்களை அடுத்த ஆண்டே நிலவுக்கு அனுப்ப ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் முடியும்.

45 ஆண்டுகளில் மனிதர்கள் நிலவுக்கு செல்வது இதுவே முதல்முறையாக அமையும்.

அவர்களின் பயணகாலம் ஒருவாரம் பிடிக்கலாம்

3 முதல் 4 லட்சம் மைல் தொலைவுக்கு அவர்கள் விண்ணில் பயணிக்கப் போகிறார்கள்.

பூமியிலிருந்து மனிதர்கள் இதுவரை பயணித்ததிலேயே அதிக தொலைவாக அது அமையும்.

இதுவரை மனிதர் செல்லாத இடத்துக்கு தைரியமாக செல்ல விரும்புபவரா நீங்கள்?

இத்தகைய பயணங்களை தொடர்ந்து நடத்தப்போவதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.