கண்ணைக்கவரும் விண்வெளிச் சுற்றுலா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கண்ணைக் கவரும் விண்வெளிச் சுற்றுலா

  • 6 மார்ச் 2017

நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம்.

இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே.

விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம்.

“விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம்.

“மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”.

இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது.

மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்லை.

“ஆனால் இதில் பயணிப்பது மற்றவற்றைவிட சாந்தமான, மனதையும் உடலையும் அமைதிப்படுத்தும் அற்புத அனுபவமாக அமையும்” என்கிறார் டேபெர் மெக்கல்லம்.

“ராக்கெட் பயணம் பிரமிப்பளிக்கலாம். சந்தேகமில்லை. ஆனால் என்னளவில் பயணம் என்பது இன்ப அனுபவமாக இருப்பது அவசியம். அருகில் நண்பரோடு, அமைதியாக அமர்ந்து, கையில் ஷேம்பெய்ன் கோப்பையுடன் விண்ணில் மிதப்பதே தனி அனுபவம்” என்கிறார்.

இந்த கலன் காற்றின் போக்கிலும் மாறும் உயரத்தைப்பொருத்தும் தன் பயணத்தை மேற்கொள்ளும்.

இதிலுள்ள கூடைப்பந்து அளவிலான பாரசூட், உங்களை மெதுவாக மண்ணில் இறங்க உதவும்.