சீனா: மின்காருக்கான அரச மானியம் காற்று மாசைக் குறைக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா: மின்சார காருக்கான அரச மானியம் காற்று மாசைக் குறைக்குமா?

  • 8 மார்ச் 2017

உலக அளவில் அதிகமான காற்றுமாசுள்ள நாடுகளின் ஒன்று சீனா. சீனாவின் காற்று மாசில், மூன்றில் ஒரு பங்கு அதன் கார்களால் ஏற்படுகிறது.

காற்றை மாசுபடுத்தும் மோசமான கார்களை குறைப்பதன் மூலம் சீன வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையை குறைத்து, நாட்டின் வான்பரப்பை மீண்டும் நீலமாக்கப்போவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக மின்சார கார்களை அதிரிப்பதன் மூலம் அந்நாட்டின் பல மில்லியன் கார்கள் வெளியிடும் நச்சுப்புகையைக்குறைக்க சீனஅரசு முயல்கிறது.

நிலக்கரி மற்றும் பெட்ரோல் சார்பிலிருந்து விடுபட்டு, மீளுருவாக்கவல்ல எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் சீன அரசு மும்முரம் காட்டுகிறது.

சீன அரசின் இந்த முயற்சிகள் உரிய பலன் தருமா? நேரில் ஆராய்ந்தது பிபிசி.