அகதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் "எந்திர வழக்கறிஞர்"

தொடக்கத்தில் போக்குவரத்து அபராதத்திலிருந்து தப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் ஒன்று, இப்போது சட்ட கோரிக்கைகளோடு வருகின்ற அகதிகளுக்கு உதவி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஜோசுவா ப்ரௌடர் "டுநாட்பே" (DoNotPay) செயலியை வடிவமைத்தபோது, உலகின் முதலாவது எந்திர வழக்கறிஞர் என்று அதனை அழைத்தார்.

உரையாடும் எந்திர கணினி செயலியான இது, எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் உரையாடல் மேற்கொள்கிறது.

அறிவுரை மற்றும் சட்ட ஆவணங்களை வழங்குவதற்கு முன்னால் ஒரு வழக்கு பற்றிய தகவல்களை திரட்டிக் கொள்ள ஃபேஸ்புக் மெசஞ்சரை இது பயன்படுத்தி கொள்கிறது.

இயந்திர கழிவுகளால் உருவான கலை (புகைப்படத் தொகுப்பு)

தொடக்கத்தில் வாகனங்களை நிறுத்த இடம் தேடுவோருக்கு அல்லது அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க இந்த கணினி செயலி வடிவமைக்கப்பட்டது.

தற்போது ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று கொண்டிருக்கும் பிரிட்டனை சேர்ந்த 20 வயதான ப்ரௌடர், இந்த செயலியை, தஞ்சம் கோருவோர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Joshua Browder

அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த செயலி குடிவரவு தொடர்பான காரியங்கள் அனைத்திற்கும் அகதிகளுக்கு உதவி வருகிறது.

ஐக்கிய ராஜ்ஜியத்தில், அரசிடம் இருந்து நிதி உதவி பெற்றுக் கொள்வதற்கும் தஞ்சம் கோரிகைகளுக்கு இது உதவுகிறது. இந்த நாடுகளின் வழக்கறிஞர்களின் உதவியோடு ப்ரௌடர் இந்த செயலியை வடிவமைத்திருக்கிறார்.

"சர்வதேச சட்டப்படி தஞ்சக் கோரிக்கையை வைக்கின்ற அகதிகள் அதற்கு தகுதியானவர்களா? என்று தெரிந்துகொள்ள இந்த செயலி பல கேள்விகளை கேட்கும் வழிமுறையில் செயல்படுகிறது.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய சொந்த நாட்டில் சித்ரவதைக்கு உள்ளாவதாக அஞ்சுகிறீர்களா? என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளலாம்" என்று ப்ரௌடர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"இதனை பயன்படுத்துகிற ஒருவர் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிய வந்தவுடன், நூற்றுக்கணக்கான விவரங்களுக்கு வழிநடத்தி செல்லும் இது, தானாகவே குடிவரவு விண்ணப்பத்தை நிரப்பிவிடுகிறது.

காணொளி: இயந்திர அறிவாற்றல் என்றால் என்ன?

முக்கியமாக, இந்த உரையாடல் செயலி கேட்கின்ற கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதனுடைய செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் கருத்துக்கள் உரையாடலின்போது தோன்றுகின்றன".

இந்த உரையாடும் செயலியை பயன்படுத்துகிற தஞ்சம் கோரிக்கையாளர், அவருடைய விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்படுவதற்கான அதிகபட்ச வாய்ப்புக்களை உருவாக்கும் வழிகளை இந்த செயலி பரிந்துரைக்கிறது.

எடுத்துக்காட்டாக, "உங்களுடைய நிலைமை பற்றிய சிறந்த விடைக்கு, உங்கள் சொந்த நாட்டில் மோசமாக நடத்தப்படுவது எப்போது தொடங்கியது என்பது பற்றிய விளக்கம் உள்ளடங்கும்" என்று இந்த உரையாடல் செயலி தெரிவிப்பதைக் கூறலாம்.

காணொளி: இயந்திர மனிதர்களால் வேலையிழக்கும் மனிதர்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இயந்திர மனிதர்களால் வேலையிழக்கும் மனிதர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்