இந்தோனேஷியா: காட்டுத்தீடுலிருந்து காக்குமா நீர்வேலி?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தோனேஷியா: காட்டுத்தீயிலிருந்து காக்கும் நீர்வேலி

2015 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீயில் இருபதாயிரம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான காடு எரிந்து சாம்பலானது.

அதைத்தொடர்ந்து அத்தகைய காட்டுத்தீயை நிறுத்தவும் அதனால் உருவாகும் காற்று மாசைக்குறைக்கவும் வேண்டும் என்கிற அழுத்தம் அரசுக்கு அதிகரித்துவருகிறது.

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு காட்டுப்பகுதி மட்டும் தனித்தீவாக தப்பியது.

காரணம் அந்த காட்டில் ஆழ்துளைக்கிணறுகளை தோண்டிய செயற்பாட்டாளர் ஒருவர், அதில் கிடைத்த தண்ணீரைக்கொண்டு அந்த காட்டைச்சுற்றி நீராலன வேலி அமைத்து தீயில் இருந்து காட்டை காப்பாற்றினார்.

அவரது அந்த அந்த முயற்சி தற்போது இந்தோனேஷியாவின் மற்ற காடுகளை காக்கும் நோக்கில் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. அந்த செயற்பாட்டாளரின் பங்களிப்பு குறித்த பிபிசியின் பிரத்யேகச் செய்தி.