குழந்தைப் பேறு ஆயுட்காலத்தை அதிகரிக்கிறதா ?

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்த இந்த ஆய்வு, குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்று முடிவுக்கு வந்தது.

இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர்.

குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் உள்ள இடைவெளி என்பது , அவர்களது 60வது வயதில், ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருக்கிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது.

பெற்றோர்கள் தங்களது முதுமைக்காலத்தில், குழந்தைகளிடம் இருந்து சமூக மற்றும் நிதி ஆதரவைப் பெறுவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்