தொட்டால் பேசும் கூகுள் ஜாக்கெட்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தொட்டால் பேசும் கூகுள் ஜாக்கெட்

தொடுதிரையைப்போல செயற்படும் ஜாக்கெட்டை லெவிஸும் கூகுளும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த கூகுள் ஜாக்கெட்டின் கைப்பகுதி தொடுதிரையைப்போல செயறபடவல்லது.

இதை அணிந்தவர் செய்யும் எளிய அசைவுகள் இதனுள் உள்ள பயன்பாடுகளை செயற்படவைக்கும்.

இந்த ஜாக்கெட்டை பிபிசி செய்தியாளர் பயன்படுத்தி பரிசோதித்துப் பார்த்தார்.

இந்த கூகுள் ஜாக்கெட்டோடு புளூடூத் இணைக்கப்பட்டது அதில் ஒரே ஒரு தடவல் மூலம் நேரத்தை அறியலாம்.

மதிய நேரம் 2.37 மணி. செல்ல வேண்டிய இடத்துக்கு ஆகும் நேரத்தையும் அது சொல்கிறது.

கேட்கும் இசையின் ஒலியளவை ஜாக்கெட்டின் முன்கையில் தடவி கூட்டலாம் குறைக்கலாம்.

இதன் விலை $350 ஆக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.