மின்னணுத்தோல்: உடலில் ஒட்டிக்கொண்டு டிவி பார்க்கலாம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மின்னணுத்தோல்: உடலில் ஒட்டிக்கொண்டு டிவி பார்க்கலாம்

உங்கள் உடலின் தோல் மீது நீங்கள் தொலைக்காட்சியை பார்க்க முடிகிற உலகை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்....

இது ஏதோ அறிவியல் கற்பனைக்கதையல்ல. ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கும் மின்னணு தோல் அதை சாத்தியமாக்கும் திறன் வாய்ந்தது.

இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.

இதை இரண்டாவது தோலைப்போல அணியலாம். அலங்காரத்துக்காக தோலில் ஒட்டிக்கொள்ளும் செயற்கை பச்சைக்குத்தல் ஓவியம் போன்றது இது.

அதேசமயம் தோலின் அசைவுக்கேற்ப மின்சாரத்தை கடத்தும் ஒளி உமிழும் டியோடுகள் இதில் உள்ளன.

இது மனித தோல் செல்லைவிட பத்து மடங்கு மெல்லிசானது. இறகைவிட எடைகுறைந்தது; லேசானது.

இதை பயன்படுத்தி மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியுமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ஆரோக்கியத்தை கண்காணிப்பது என்கிற அத்தியாவசியத்தேவை முதல் தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வரை இந்த மின்னணுத்தோல் பலவற்றை சாத்தியமாக்கவல்லது என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.