நிறமிழக்கும் இயற்கை ஓவியம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிறமிழக்கும் இயற்கை ஓவியம்

  • 10 ஏப்ரல் 2017

நீருக்கு அடியில் இயற்கை தீட்டிய அற்புத ஓவியங்களில் ஒன்று நிறம் குன்றி களையிழந்து காணப்படுகிறது.

சுமார் ஆயிரத்தி ஐந்நூறு கிலோமீட்டர் பரப்பளவில் படர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் Great Barrier Reef என்றறியப்படும் பழப்பாறைத்தொகுப்பின் மூன்றில் இரண்டுபகுதி வெளிர்த்துப்போனதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது ஆண்டாகவும் இந்த பாதிப்பு நீடிப்பதை வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன.

பவழப்பாறைகளின் சிகப்பு நிறத்திற்கு காரணமான கடற்பாசிகள் அழிந்தால் பவழப்பாறைகள் பசியால் வாடத்துவங்கும். உடனடியாக அவை இறக்காது. ஆனால் அவை வலுவிழந்துபோவதால் படிப்படியாக இறக்கும்.

பழவப்பாறைகள் தாமாகவே மீளுருவாக்கொள்ளும் வலிமை கொண்டவை. ஆனால் சென்ற ஆண்டின் பாதிப்பிலிருந்தே மீளாத நிலையில் இந்த ஆண்டின் பாதிப்பும் சேரும்போது அவை மீளமுடியுமா என்பதே விஞ்ஞானிகளின் கவலை.

இத்தாலி அல்லது ஜப்பான் அளவுள்ள இந்த இயற்கை அதிசயம், 1981 ஆம் ஆண்டுமுதல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தருகிறது.

கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் இந்நிகழ்வு, புவி வெப்பமடைவதால் வேகமெடுத்திருக்கிறது. உலகின் இயற்கை பொக்கிஷங்களின் ஒன்றை காப்பதற்கான கால அவகாசம் கைநழுவிப்போய்க்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.