கண்ணுக்குத் தெரியா மண்புழுக்கள் காசுகொட்டும் மூலதனமா?

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் நிலத்தை வளமாக்க மண்புழுக்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன.

ஐவரி கோஸ்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளான கோக்கோ ஓடுகளையும் பன்றி மற்றும் கோழிகளின் கழிவுகளைத் தின்னும் மண்புழுக்கள் வெளியேற்றும் தனித்தன்மை மிக்க இயற்கை உரம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமும் இயற்கை விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் பன்னாட்டு உர நிறுவனங்களும் இதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துள்ளன.

கண்ணுக்குத் தெரியாத மண்புழுக்களைக்கொண்டு இயற்கையை பாதிக்காத சத்துமிக்க உரத்தை உருவாக்கிய ஐவரி கோஸ்ட் நுண்ணுயிரியியலாளரை நேரில் சந்தித்தது பிபிசி.