தொடக்க கால விண்வெளிப் பயணம்
தொடக்க கால விண்வெளிப் பயணங்களி்ன் புகைப்பட தொகுப்பு இது

பட மூலாதாரம், NASA
விண்வெளிக்கு செல்கின்ற விண்கலனில் மனிதர்களை அனுப்புவதற்கு தயாராகுவதற்கு முன்னர், அமெரிக்கe மற்றும் சோவியத் ரஷ்யாவின் விண்வெளி நிறுவனங்கள் சிறிது காலமே நீடித்த விண்வெளிப் பயணத்திற்கு விலங்குகளை அனுப்பி வைத்தன. 1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஃபுளோரிடாவின் கேப் கனாவெரால் என்ற இடத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலத்தில் ஹாம் என்ற சிம்பன்சி குரங்கு பயணம் செய்தது. எந்த காயமும் இன்றி பூமிக்கு திரும்பிய அந்த சிம்பன்சி குரங்கு, மீண்டும் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள குறைவான ஆர்வத்தையே வெளிப்படுத்தியது.
பட மூலாதாரம், NASA
நாசாவின் ஏவுகணை வடிவமைப்பாளர் வெம்ஹெர் வோன் பிரவுன் (இடது) மற்றும் மெர்குரி 7 விண்வெளி வீரர் கோர்டன் கூப்பர் (வலது) அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர் அலென் ஷெபர்டுடன் தொடர்பு கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். 1961 ஆம் ஆண்டு அலென் ஷெபர்டு பயணித்த விண்ணில் சீறி பாய்ந்த ஃபிரீடம் 7 விண்கலன் 15 நிமிடம் துணை சுற்றுப்பாதையில் பயணித்த பின்னர், அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்தது.
பட மூலாதாரம், Getty Images
சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் (நடுவில்) விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணியான வலன்சியா டெரிஷக்கேஃபா (இடது) மற்றும் அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்து வரலாற்று பதிவை உருவாக்கிய வலெரி பைகேஃப்ஸ்கையுடன் (வலது) கைகோர்த்துள்ளார். விண்வெளி திட்டத்தில் வெற்றியடைந்ததை பரப்புரை செய்வதின் மதிப்பை குருசேவ் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.
பட மூலாதாரம், NASA
1962 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “ஃபிரன்ஷிப்” விண்கலத்தில் தன்னுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்திற்கு பிறகு யுஎஸ்எஸின் நோயவில் .இளைப்பாறும் விண்வெளி வீரர் ஜான் கிளென். சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த இந்த பயணத்தில், கிளென் நான்கு முறை உலகை சுற்றி வந்தார்.
பட மூலாதாரம், Getty Images
1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சோவியத் ஒன்றியத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விண்வெளியில் முதல்முறையாக நடந்த விண்வெளி வீரர் அலெக்ஸி லியோநோஃப். 12 நிமிடம் நீடித்த இந்த விண்வெளி நடையின்போது, யோநோஃபின் உடையில் காற்று அதிகரித்து பருமனாக தொடங்கியதும் அவரால் விண்கலத்திற்குள் நுழைய முடியவில்லை. ஒரு வால்வு மூலம் காற்றை வெளியேற்றி தன்னுடைய உயிரை அவர் காத்து கொண்டார்.
பட மூலாதாரம், NASA
1960களின் மத்தியில், அமெரிக்கா சோவியத் ஒன்றியத்துடன் விண்வெளி போட்டி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தைவிட சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு, நாசா விண்வெளி வீரர் எட் ஒயிட் 1965 ஆம் ஆண்டு விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கரானார். ஒயிட்டிடம் இருந்து விண்வெளியில் மிதந்த கையுறை விண்வெளியில் தொடக்கத்தில் விழுந்த குப்பையாகியது.
பட மூலாதாரம், NASA
விண்வெளி வீரர்கள் கஸ் கிரிஸ்சோம் (இடது) மற்றும் ஜான் யோங் (வலது) இருவரும் விண்வெளி பயணத்திற்கு பிறகு பெருங்கடலில் விழுந்த பின்னர், அதிலிருந்து வெளியேறுவது பற்றிய பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு டெக்ஸாஸிலுள்ள எல்லிங்டன் விமான தளத்தில் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
பட மூலாதாரம், NASA
விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சந்தித்து இரு கலன்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்காக கெமினி 6 மற்றும் 7 விண்கலன்கள் ஒரே நேரத்தில் விண்வெளியில் ஏவப்பட்டன. தாமஸ் ஸ்டாஃபோர்டு மற்றும் வால்டர் ஸ்சாய்ரியா அணியினர் பயணித்த இந்த விண்கலன்கள் 30 சென்டிமீட்டர் இடைவெளியில் இணைந்து பூமிக்கு திரும்பின.
பட மூலாதாரம், NASA
ஜெமினி 9 விண்வெளி பயணத்தின்போது, யூஜின் சிமெனும், தாமஸ் ஷ்டாஃபோர்டும், இரு விண்கலன்களும் இணைகின்ற இலக்கு கருவியோடு தாங்களும் ஒத்துழைத்து இரு கலன்களை இணைந்து கொள்ள வேண்டும். ஆனால், “கோப முதலை” என்று பெயரிடப்பட்ட அந்த இணைப்புக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் இந்த அணியால் இதனை இந்த பணியை செய்து முடித்து சாதிக்க முடியவில்லை.
பட மூலாதாரம், NASA
மெர்குரி மற்றும் ஜெமினி விண்வெளிப் பயணங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் நாசாவின் சந்திர ஆய்வு பயணத்திட்டம் வெற்றியடைய முக்கிய பங்காற்றியது. 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் சந்திரனில் தரையிறக்கும் ஆய்வு வாகனம் கலிஃபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத்தளத்தில் சோதனை செய்யப்படுவதை காட்டுகிறது,